தமிழக திராவிட ஜனநாயக கட்சி

"மக்களின் தேவைகளே எங்கள் கட்சியின் கொள்கைகள்"

தமிழக திராவிட ஜனநாயக கட்சி — கொள்கை மற்றும் நோக்கங்கள்
எல்லோருக்கும் எல்லாம்...இதுவே எமது கொள்கை...
logo

தமிழக திராவிட ஜனநாயக கட்சி

"மக்களின் தேவைகளே எங்கள் கட்சியின் கொள்கைகள்"

Dr.டாப்சா.சு.ஆறுமுகம்
நிறுவனத் தலைவர் —Dr.டாப்சா.சு.ஆறுமுகம்
மாற்றத்தை விரும்பும் மக்களின் புதிய குரல்!
Dr.டாப்சா.சு.ஆறுமுகம்

நிறுவனத் தலைவர்

Dr.டாப்சா.சு.ஆறுமுகம்

மாற்றத்தை விரும்பும் மக்களின் புதிய குரல்!

அரைநூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் சமூக நீதிப் பங்களிப்புகளையும், உலகளாவிய ஜனநாயக விழுமியங்களையும் ஒன்றிணைத்து, மக்களின் தேவைகளையே கொள்கையாகக் கொண்டு பயணிக்கும் திராவிட ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவராக, மக்கள் மத்தியில் நேரடியாக இறங்கி குரல் கொடுக்கிறார்.

இணையுங்கள்

உறுப்பினர் அட்டை விண்ணப்பம்

திராவிட ஜனநாயக கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்து, மாற்றத்தை விரும்பும் மக்களின் இயக்கத்தில் உங்கள் குரலையும் இணைக்கவும். கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது நேரடியாக விண்ணப்பிக்கவும்.

  • 1 QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் / லிங்கைத் திறக்கவும்
  • 2 உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்
  • 3 உங்கள் உறுப்பினர் அட்டையைப் பெறவும்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் QR இப்போதே விண்ணப்பிக்க
கொள்கை மற்றும் நோக்கங்கள்

தமிழக திராவிட ஜனநாயக கட்சி — கொள்கை மற்றும் நோக்கங்கள்

முன்னுரை

தமிழகத்தின் சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம், தமிழ் மொழி மற்றும் பண்பாடு, மாநில உரிமைகள், மனிதநேயம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனநாயக வழியில் மக்கள் நல அரசியலை முன்னெடுப்பதே தமிழக திராவிட ஜனநாயக கட்சியின் நோக்கமாகும்.

அரசியலமைப்பு பிரிவு 1 : திராவிடக் கொள்கை

சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, மனிதநேயம், சாதி வேறுபாடற்ற சமுதாயம் மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு ஆகிய திராவிட சிந்தனையின் அடிப்படைக் கொள்கைகளை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்லுதல்.

அரசியலமைப்பு பிரிவு 2 : தமிழ் தேசிய உணர்வு

தமிழ் மொழி, தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், மரபு மற்றும் தமிழகத்தின் தனித்துவமான அடையாளங்களை பாதுகாத்து வளர்ப்பது. தமிழகத்தின் உரிமைகள் மற்றும் தமிழர் நலன்களை இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனநாயக வழிகளில் பாதுகாப்பதே கட்சியின் தமிழ் தேசியக் கொள்கையாகும்.

அரசியலமைப்பு பிரிவு 3 : தமிழ்மொழி

தமிழை ஆட்சி, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் மேலும் வளர்க்கவும், தமிழில் உயர்தர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை உருவாக்கவும் பாடுபடுதல்.

அரசியலமைப்பு பிரிவு 4 : மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி

இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தி, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள், நிதி உரிமைகள் மற்றும் நிர்வாக உரிமைகளை பாதுகாத்தல்.

அரசியலமைப்பு பிரிவு 5 : சமூகநீதி

சாதி, மதம், பாலினம், மொழி, பொருளாதார நிலை உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் மனிதர்களுக்கு அநீதி அல்லது பாகுபாடு ஏற்படாத சமத்துவமான சமூகத்தை உருவாக்க பாடுபடுதல்.

அரசியலமைப்பு பிரிவு 6 : சாதியற்ற சமுதாயம்

சாதி அடிப்படையிலான உயர்வு-தாழ்வு, தீண்டாமை மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்து, ஒவ்வொரு மனிதருக்கும் சமமான மரியாதையும் வாய்ப்பும் கிடைக்கச் செய்தல்.

அரசியலமைப்பு பிரிவு 7 : மதச்சார்பின்மை

அனைத்து மதங்களையும் மதித்து, எந்த ஒரு மதத்திற்கும் அரசு சார்பாக இருக்கக்கூடாது என்ற மதச்சார்பின்மைக் கொள்கையை நிலைநிறுத்துதல்.

அரசியலமைப்பு பிரிவு 8 : ஜனநாயகம்

கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை பாதுகாத்து வலுப்படுத்துதல்.

அரசியலமைப்பு பிரிவு 9 : பெண்கள் முன்னேற்றம்

பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுயநிலை, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்பில் சமமான வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுதல்.

அரசியலமைப்பு பிரிவு 10 : இளைஞர் முன்னேற்றம்

இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில் தொடக்கம், விளையாட்டு மற்றும் அரசியல் பங்கேற்பை ஊக்குவித்தல்.

அரசியலமைப்பு பிரிவு 11 : தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்

தொழிலாளர்களின் உரிமைகள், நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலனை பாதுகாத்தல். விவசாயிகளின் வாழ்வாதாரம், உற்பத்தி, சந்தை வாய்ப்பு, நீர்வளம் மற்றும் விவசாய உரிமைகளை பாதுகாக்க பாடுபடுதல்.

அரசியலமைப்பு பிரிவு 12 : திராவிட ஜனநாயக தொழிற்சங்க பேரவை

தமிழக திராவிட ஜனநாயக கட்சியின் தொழிலாளர் நலன் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு பிரிவு-அமைப்பு செயல்படுதல்.

அரசியலமைப்பு பிரிவு 13 : கல்வி மற்றும் சுகாதாரம்

அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வதற்கான கொள்கைகளை முன்னெடுத்தல்.

அரசியலமைப்பு பிரிவு 14 : தமிழக இயற்கை வளங்கள்

தமிழகத்தின் நீர், நிலம், காடு, கடல், கனிமம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளின் நலனையும் கருத்தில் கொண்டு நிலையான வளர்ச்சியை வலியுறுத்துதல்.

அரசியலமைப்பு பிரிவு 15 : ஊழல் எதிர்ப்பு மற்றும் நல்லாட்சி

வெளிப்படையான நிர்வாகம், பொறுப்புணர்வு, சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நல்லாட்சியை உருவாக்க பாடுபடுதல். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து ஜனநாயக மற்றும் சட்டரீதியான வழிகளில் செயல்படுதல்.

அரசியலமைப்பு பிரிவு 16 : இந்திய அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு

இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டு, சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துதல். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, தமிழகத்தின் உரிமைகள் மற்றும் மக்களின் நலன்களுக்காக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஜனநாயக வழிகளில் செயல்படுதல்.

அடிப்படை நோக்கம் & வேறுபாடு

கட்சியின் அடிப்படை அரசியல் நோக்கம்

“திராவிட சிந்தனையின் சமூகநீதி - தமிழ் தேசிய உணர்வின் மொழி மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு - ஜனநாயகத்தின் மக்கள் அதிகாரம் - கூட்டாட்சியின் மாநில உரிமை” ஆகிய நான்கு அடித்தளங்களின் மூலம் தமிழக மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதே தமிழக திராவிட ஜனநாயக கட்சியின் அடிப்படை நோக்கமாகும்.

நாங்கள் எவ்வாறு வேறுபடுகிறோம்?

நேர்மையான நிதி திரட்டல்

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தாமல், மக்களின் பங்களிப்போடு மட்டுமே கட்சி செயல்படும்.

மக்களோடு மக்களாக

தேர்தல் நேரத்தில் மட்டும் வராமல், 365 நாட்களும் மக்கள் பிரச்சனைகளுக்காகக் களத்தில் நிற்போம்.

தொழில்நுட்பம் பயன்பாடு

மக்களின் குறைகளை நேரடியாகத் தலைவர்களிடம் கொண்டு சேர்க்க பிரத்யேக செயலி (App) மற்றும் இணையதளம்.

எங்களுடன் இணையுங்கள்! மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும்!

கட்சியில் உறுப்பினராக இணையவும், உங்களது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் கீழே உள்ள வழிகளைப் பயன்படுத்தலாம்.

எங்கள் அடையாளம்

எங்கள் சின்னம் – எங்கள் சிந்தனை – எங்கள் பாதை

சின்னத்தின் பொருள்

  • ஜோதி — அறிவு, வளர்ச்சி, ஒளிமை
  • மக்கள் கைகள் — ஒற்றுமை, சக்தி, ஜனநாயகம்
  • நான்கு நிறங்கள் — சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்
  • நான்கு நிறங்கள் ஒன்றிணைந்து ஒளியாக மாறுவது — திராவிட சிந்தனை வெற்றியின் பாதை

எங்கள் கொள்கைகள்

⚖️ சமூக நீதி
🗳️ ஜனநாயகம்
📈 மக்கள் முன்னேற்றம்
☮️ மதச்சார்பின்மை மற்றும் சமத்துவம்
எங்கள் முழக்கம்

மக்கள் கையில் ஜோதி – மாற்றம் நம் சக்தி!

தமிழக திராவிட ஜனநாயக கட்சி

நேர்மை • நம்பிக்கை • நலன்
மக்களுக்காக – மக்களோடு – மக்களால்
எங்கள் இலக்கு

ஒன்றுபட்ட மக்கள் · வலுவான தமிழகம் · ஒளிமயமான எதிர்காலம்

எங்கள் சிந்தனையாளர்கள்

எங்கள் கொள்கைகளுக்கு வழிகாட்டிய பெரியோர்கள்

சிந்தனையாளர்கள்

அரைநூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் சமூக நீதிப் பணிகளையும், உலகளாவிய ஜனநாயக விழுமியங்களையும் இணைத்து வழிநடத்திய சிந்தனையாளர்களின் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்.

தொடர்பு கொள்ள

எங்களுடன் இணையுங்கள்!

தலைமையகம் முகவரி

முகவரி 1நெ.22 மில்ட்டரி காலனி முதல் வீதி, ராயபுரம், திருப்பூர் – 1, தமிழ்நாடு
முகவரி 2251, நடராஜ் தியேட்டர் ரோடு, கருவம்பாளையம், திருப்பூர் – 4, தமிழ்நாடு
மின்னஞ்சல்djktamilnadu@gmail.com
தொலைபேசி95006 59305  |  90429 08469

மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும்!

கட்சியில் உறுப்பினராக இணையவும், உங்களது ஆலோசனைகளைப் பகிரவும் இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்.

உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பிக்க